search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியர் சுட்டுக்கொலை"

    அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இந்தியர் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. #US #SunilEdla
    நியூயார்க்:

    அமெரிக்காவில் நியூஜெர்சி மாகாணத்தில் அட்லாண்டிக் நகரம் அருகே வென்ட்னார் நகரத்தில் நா‌ஷ்வில்லே அவினியூவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர், சுனில் எட்லா (வயது 61). இந்தியர். இவர் அங்கு ஆடிட்டராக பணியாற்றி வந்தார்.

    கடந்த வியாழக்கிழமை இரவு, அவர் தனது அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து இரவுப்பணிக்கு செல்ல கீழே இறங்கி வந்தபோது அங்கு மறைந்திருந்த மர்ம நபர் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு ரத்த வெள்ளத்தில் வீழ்த்தி விட்டு தப்பினார்.

    அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து, அவர்கள் வருவதற்குள் சுனில் எட்லா உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுனில் எட்லாவின் கார், வீட்டில் இருந்து மாயமாகி விட்டது. எனவே காரை கொள்ளையடிப்பதற்காகத்தான், சுனில் எட்லா படுகொலை செய்யப்பட்டுள்ளார் என கருதப்படுகிறது.

    சுனில் எட்லாவின் கார் வேறு ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அட்லாண்டிக் நகர கண்காணிப்பு மையத்தின் உதவியுடன், அந்த காரை ஓட்டிச்சென்றவர் யார் என கண்டறிந்து கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட நபர் 16 வயது சிறுவன். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி விட்டு, எக் ஹார்பர் நகரில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த சிறையில் அடைத்தனர்.

    சுனில் எட்லாவுக்கு 2 பிள்ளைகள். பேரக்குழந்தையும் உள்ளது. சுனில் எட்லா சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி அவரது மகன் மோரிசன் எட்லா கூறும்போது, ‘‘ நான் பேச்சு மூச்சற்றுப்போய் விட்டேன். காரை கொள்ளையடித்தவர்கள், என் தந்தையை விட்டிருக்கலாமே’’ என வேதனையுடன் குறிப்பிட்டார்.

    சுனில் எட்லாவின் நெருங்கிய உறவினரான ராஜ் காசுலா கூறுகையில், ‘‘ அவர் (சுனில் எட்லா) மிகவும் மென்மையானவர். யாரிடமும் எதற்கும் வாக்குவாதம் செய்ய மாட்டார். நான் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தேன். அவர் 1987-ம் ஆண்டு இங்கு வந்து குடியேறியபோது அவருக்கு தேவையான உதவிகள் செய்தேன். இப்போது அவர் இந்தியாவுக்கு 2 மாதம் செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். தனது தாயாரின் 95-வது பிறந்த நாளை கொண்டாட வேண்டும், குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று விரும்பினார்’’ என தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும்போது, ‘‘அவர் இந்தியாவுக்கு சென்று வர திட்டமிட்டிருந்ததால் எல்லோரும் அவரை அழைத்து பேசிக்கொண்டிருந்தார்கள்’’ என்றார்.

    சுனில் எட்லாவின் குடும்ப நண்பர் தவே நேத்தகனி கூறுகையில், ‘‘ சுனில் எட்லா மிகவும் அருமையான மனிதர். அட்லாண்டிக் நகரில் தேவாலய வழிபாட்டில் பியானோ வாசிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்’’ என்றார்.

    கொலை செய்யப்பட்டுள்ள சுனில் எட்லா, தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தை சேர்ந்தவர் என தகவல்கள் கூறுகின்றன. #US #SunilEdla
    அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனை போலீசார் கைது செய்தனர். #Indiankilled

    நியூஜெர்சி:

    தெலுங்கானா மாநிலம் மேடக் பகுதியை சேர்ந்தவர் சுனில் எட்லா (61). இவர் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் வென்ட்னார் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.

    அட்லாண்டிக் சிட்டியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்தார். கடந்த 15-ந்தேதி இரவு இவர் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியேவந்தார்.

    அப்போது 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் அங்கு காரில் வந்தான். அதில் இருந்து இறங்கிய அவன் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுனில் எட்லாவை சரமாரியாக சுட்டான்.

    இதனால் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அந்த சிறுவன் காரில் ஏறி தப்பி ஓடிவிட்டான்.


    தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி துப்பாக்கியால் சுட்ட சிறுவனை கைது செய்தனர்.

    அவன் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கொள்ளை மற்றும் சட்டத்துக்கு விரோதமாக கைத் துப்பாக்கி வைத்திருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்கு போடப்பட்டுள்ளது.

    சுனில்எட்லா கடந்த 1987-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியா வந்து தனது குடும்பத்தினரை சந்தித்தார். டிசம்பர் மாதத்தில் தனது தாயாரின் 98-வது பிறந்த நாள் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட 2 மாத விடுமுறையில் இந்தியா வர இருந்தார்.

    தாயாரின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். அதற்குள் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுடப்பட்டதற்கான காரணம் வெளியிடப்படவில்லை. இவர் அட்லாண்டிக் சிட்டியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பியானோ வாசித்து வந்தார். இதனால் இவர் பிரபலமானவராக திகழ்ந்தார். #Indiankilled

    ×